News Just In

4/13/2020 05:16:00 PM

சித்திரைப் புத்தாண்டினை பாதுகாப்பாக வீட்டிலிருந்து கொண்டாடுங்கள்-மட்டு மாநகர முதல்வரின் வாழ்த்து செய்தி


சித்திரைப் புத்தாண்டினை அனைவரும் பாதுகாப்பாக வீட்டிலிருந்து கொண்டாட வேண்டும் என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார நிறுவனம் கொரோணா வைரஸை உலகத் தொற்று நோயாக பிரகடனப்படுத்தியுள்ள நிலையில் பொதுமக்கள் பொறுமை மற்றும் சகிப்புத் தன்மையைக் கடைப்பிடித்து நோய்த் தொற்று வராமல் தடுப்பதற்காக தங்களது சமூகக் கடமையை நிறைவேற்ற வேண்டும்.

பொது மக்களின் சுகாதார நலன் கருதி சுகாதார வைத்திய அதிகாரிகளின் தொழில்நுட்ப ஆலோசனைகளுக்கிணங்க பல்வேறு பொறிமுறைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்றைய சித்திரைப் புத்தாண்டினை அனைவரும் பாதுகாப்பாக வீட்டிலிருந்து கொண்டாட வேண்டும் என்றும் 

மலர்ந்துள்ள தமிழ்ப் புத்தாண்டானது கொரொனா அச்சம் அற்றதும் உலக மக்கள் நிம்மதியாகவும், பொருளாதார வலுமிக்கவர்களாகவும் வாழக்கூடிய சூழலை சகலருக்கும் பொதுவான இறைவன் உருவாக்கித்தர வேண்டும் என்று பிரார்த்திப்பதாகவும் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

No comments: