News Just In

4/09/2020 02:30:00 PM

உணவகமொன்றின் அருகிலிருந்து சடலம் மீட்பு-கிருமி நீக்கல் நடவடிக்கையும் முன்னெடுப்பு

உணவகம் ஒன்றின் வாகனத் தரிப்பிடத்திலிருந்து நேற்றையதினம் (08) இனந்தெரியாத ஒருவரின் சடலமொன்று கல்கிஸ்ஸை சேரம் வீதியில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்த நபர் சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இதேவேளை, சர்வதேச கிருமி நீக்க விதிமுறைகளுக்கு அமைவாக சடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் கிருமி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

உயிரிழந்தவர் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் இது முன்னெடுத்துள்ளனர்.

No comments: