News Just In

4/04/2020 12:15:00 PM

கல்லடியில் மட்டு மாநகர சபையினால் உலருணவுப் பொதிகள் வழங்கிவைப்பு!!

ஊரடங்குச் சட்டத்தால் வாருமானத்தினை இழந்த குடும்பங்களுக்கான நிவாரண உதவிகளை மட்டக்களப்பு மாநகர சபையானது முன்னெடுத்து வருகின்றது.

கொரொனா நோய்ப்பரவலினைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசாங்கத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தால் தமது வாருமானத்தினை இழந்துள்ள குடும்பங்களுக்கு உதவும் வகையில் மட்டக்களப்பு மாநகர சபையும், புலம்பெயர் தொண்டு அமைப்புகளும் இணைந்து நிவாரண பணிகளை முன்னெடுத்து வருகின்றன.

இன்று(04.04.2020) கல்லடி கிராம சேவையாளர் பிரிவிலும் மற்றும் கல்லடி வேலூர் கிராம சேவையாளர் பிரிவிலும் அரிசி பொதிகள் குறித்த கிராம சேவையாளர்களிடம் கையளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர சபையின் நிதியின் ஊடாகவும், மாநகர முதல்வரின் வேண்டுகோளிற்கிணங்க எமது சமுகம், கனடா பாடுமீன் அமைப்பு, கே.ஓ.வி. குடும்பத்தினர், அவுஸ்திரேலியா மற்றும் இலண்டன் நலன்விரும்பிகள் ஆகியோருடன் மயூரன், சண்முகலிங்கம் எனும் தனிநபர்களின் நிதிப்பங்களிப்புடனும் மேற்படி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மற்றும் மாநகர சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு பொருட்களை கையளித்திருந்தனர்.










No comments: