News Just In

4/30/2020 09:28:00 AM

கசிப்பு உற்பத்திக்கு எதிராக குரல்கொடுத்த பிரதேச சபை உறுப்பினர் மீது வாள்வெட்டு!!

அண்மைக்காலமாக இலங்கையில் கசிப்பு உற்பத்தி விரைவாக அதிகரித்து வரும் நிலையில் கசிப்பு உற்பத்திக்கு எதிராகக் குரல் கொடுத்த பிரதேச சபை உறுப்பினர் மற்றும் அவரது மனைவி மீது
வாள்வெட்டு நேற்று (29) இரவு நடத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினரான அரியகுட்டி நிமலறோகன் மற்றும் அவரது மனைவியும் வாள்வெட்டுக்கு இலக்காகிய நிலையில் நேற்று (29) இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பலத்த காயமடைந்த பிரதேச சபை உறுப்பினர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நேற்று (29) இடம்பெற்ற சாவகச்சேரி பிரதேச சபையின் அமர்வின்போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச சபை உறுப்பினர் அரியகுட்டி நிமலறோகன் தெரிவித்திருந்த நிலையிலேயே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிரதேச சபை உறுப்பினரின் வீட்டினுள் நுழைந்த மூவர் கொண்ட குழுவினரே குறித்த இருவரையும் வாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவித்த சாவகச்சேரி பொலிஸார் சம்பவம் தொடர்பாக ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

No comments: