மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலகங்களுக்கு இதுவரை 40,909 நிவாரண உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 17,868 உலருணவுப்பொதிகள் கிடைக்கவுள்ளதாகவும் அவை கிடைக்கப்பெற்றதும் அவற்றினையும் பங்கீடு செய்வதற்கு பிரதேச செயலாளர்கள் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மாவட்டத்தில் இயங்கிவரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நபர்கள் அதனை தவிரவும் தாங்களாக முன்வந்தும் உதவும்செயல்த்திட்டங்களும் பிரதேச செயலாளர்கள் மூலமாகவும் வழங்கப்பட்டது.
இதில் குறிப்பாக தொண்டு நிறுவனங்களுடாக 13,795 உணவுப்பொதிகளும் தனிப்பட்ட நபர்கள் மூலமாக கிடைத்த நிதியூடாக 870 உணவுப்பொதிகளும் மேலும் தனிநபர்களாக பொதிசெய்த உணவுப்பெருட்கள் 8,376 பிரதேச செயலகங்களுடாக வழங்கப்பட்டுள்ளது.
அதனைத் தவிரவும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள நிவாரணப்பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

No comments: