News Just In

4/12/2020 11:52:00 AM

நிந்தவூரில் ஹெரோயின் போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்த மூவர் கைது!!

அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 23 – 34 ஆகிய வயதுக்கு இடைப்பட்ட நிந்தவூர் பகுதியைச் சேர்ந்த மூவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (12) அதிகாலை 1.30 மணியளவில் சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

ஹெரோயின் போதைப் பொருளை நிந்தவூர் பகுதியில் வீடு ஒன்றில் பொதி செய்து கொண்டிருந்த நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 58 கிராம் 80 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

No comments: