
மட்டக்களப்பு- புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் இன்று(09) காலை முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளகியுள்ளது.
புதுக்குடியிருப்பு ஆயுர்வேத வைத்தியசாலையின் முன்னால் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது, மட்டக்களப்பு நகர் பகுதியினை நோக்கி மரக்கறி மூட்டைகளை ஏற்றிவந்த முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
முச்சக்கர வண்டியின் முன் டயர் பழுதடைந்தமையால் கட்டுப்பாட்டை இழந்த வண்டி வீதியின் அருகில் உள்ள பள்ளத்தில் தடம்புரண்டு இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று ஊரடங்கு தளர்த்தப்படுவதனால் சந்தைக்கு பொருட்களை ஏற்றிவரும்போது ஏற்பட்ட இவ் விபத்தில் எவருக்கும் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை.




No comments: