குழந்தை பிரசவித்த பின்னர் பரிசோதனை மேற்கொண்டபோது அவர் கொரோனா தொற்றியிருந்தமை அடையாளங்காணப்பட்டுள்ளது.
பிறந்த குழந்தைக்கும் கொரோனா தொற்று உள்ளதா என்பது தொடர்பில் பரிசீலிக்கப்பட்டுவருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த பெண் வசிக்கும் பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் சிலர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தமை அடையாளம் காணப்பட்டபோதிலும் பெண் தனக்கான அறிகுறிகள் குறித்து வைத்தியசாலை மருத்துவர்களுக்கு தெரிவிக்கவில்லை என்றும் இதனால் வைத்தியசாலை மருத்துவர்கள் உட்பட்டவர்கள் பலத்த சிரமங்களை எதிர்நோக்கியிருப்பதாக தெரியவருகிறது.
குறித்த பெண் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments: