News Just In

4/12/2020 02:44:00 PM

வாழைச்சேனை விசேட அதிரடிப் படையினரால் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மரங்கள் கைப்பற்றப்பட்டன!!

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குபட்ட சந்தியாற்று பகுதியில் சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட மருதை மரங்களை வாழைச்சேனை விசேட அதிரடிப் படையினரால் வெள்ளிக்கிழமை மாலை கைப்பற்றினர்.

அக்குறனை பகுதியில் இருந்து ஓட்டமாவடி பிரதேசத்திற்கு சட்டவிரோதமான முறையில் மரங்கள் கொண்டுவரப்பட்ட நிலையில் வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்ற வேளை மரம் கடத்தியவர்கள் இராணுவ புலனாய்வு அதிகாரிகளை சந்தித சமயத்தில் மரத்தினை சந்தியாற்றில் போட்டுவிட்டு தப்பியோடி உள்ளனர்.

இதில் ஏழ அடி நீளம் கொண்ட ஐந்து மருதை மரங்கள் கைப்பற்றப்பட்டு, கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபுக்கு தெரியப்படுத்தி அவர் முன்னிலையில் குறித்த மரங்கள் வாழைச்சேனை விசேட அதிரடிப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் ஈடுபட்டு வந்த நபர்கள் தப்பி ஓடியுள்ளதுடன், இவர்கள் தொடர்பான விசாரணைகளை இராணுவ புலனாய்வு அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: