இலங்கையில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்தும் அங்கவீனர்களாகவும் ஆக்கிய பயங்கரவாத குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று இன்று செவ்வாய்க்கிழமை (21.04.2020) ஓராண்டு நிறைவு நிகழ்வு நாடாளாவிய ரீதியில் இடம்பெற்றது.
அந்தவகையில் உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு சம்பவத்தின் ஓராண்டு நினைவு நாள் நிகழ்வு வாழைச்சேனை பிரதேச சபையின் ஏற்பாட்டில் அதன் தவிசாளர் திருமதி சேஸாபா ஜெயரஞ்சித் தலைமையில் இடம்பெற்றது.
உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்காக மெழுகுதிரி ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் உயிரிழந்தவர்களினை நினைவுகூர்ந்து மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீதான தாக்குதலில் 31பேர் உயிரிழந்திருந்ததுடன் 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்களான கே.நல்லரட்ணம், கே.எல்.இப்றாஹிம் (அஸ்மி), திருமதி லட்சுமி மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்களான கே.நல்லரட்ணம், கே.எல்.இப்றாஹிம் (அஸ்மி), திருமதி லட்சுமி மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.














No comments: