News Just In

4/08/2020 10:07:00 PM

கிராம சேவையாளர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை கண்டறிய இணைய வசதி அறிமுகம்


பொதுமகன் ஒவ்வொருவரும் தமது பிரிவு கிராம சேவையாளர், சமுர்த்தி – அபிவிருத்தி உத்தியோகத்தரை கண்டறிய இணையம் ஊடாக வசதி



நாட்டு மக்கள் அனைவரும் தமது பிரதேச செயலர் பிரிவில் கிராம சேவையாளர், சமுர்த்தி அலுவலகர், அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கள உத்தியோகத்தர் ஆகியோரது விவரங்களைக் கண்டறிய பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதனடிப்படையில் அமைச்சின் இணையத்தளத்துக்குச் சென்று தமது பிரதேச செயலர் பிரிவில் கிராம சேவையாளர், சமுர்த்தி அலுவலகர், அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கள உத்தியோகத்தர் ஆகியோரது விவரங்களைக் கண்டறிய ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

http://moha.gov.lk/officerinfo/tamil/ என்ற இணையத்தள முகவரிக்குச் சென்று இந்த விவரங்களைக் கண்டறிந்து அவர்களுடைய சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

No comments: