News Just In

4/26/2020 08:49:00 AM

சட்டமா அதிபர் திணைக்களத்தின் பணிகளை மீள ஆரம்பிக்க அனுமதி


சட்டமா அதிபர் திணைக்களத்தின் பணிகளை சட்டமா அதிபரின் கோரிக்கைக்கு அமைய, சுகாதாரத் துறையினரின் வழிகாட்டலின்படி  மீள ஆரம்பிப்பதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது.

இதற்கமைய, சட்டமா அதிபர் திணைக்கள பணிகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றும் தனியார் பாதுகாப்பு நிறுவன பணியாளர் ஒருவர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, சட்டமா அதிபர் திணைக்களத்தை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: