News Just In

4/10/2020 10:10:00 PM

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் விஷேட துஆ பிராத்தனை-நிவாரணமும் வழங்கிவைப்பு

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
உலகை ஆக்கிரமித்துள்ள கொரோனா நோயிலிருந்து உலகத்தில் உள்ள அனைத்து மக்களையும் பாதுகாப்பதற்காகவும் இந்த நாட்டின் கொரோனாவை இல்லாமல் செய்வதற்கு பாடுபட்டு வரும் ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு துறையினர், சுகாதார துறையினர் ஆகியோருக்கு தேகாரோக்கியம் கிடைக்க வேண்டும் என்று விஷேட துஆ பிராத்தனை நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் பாலைநகர் கிராமத்தில் அமைந்துள்ள இமாம் ஜஃபர் ஸாதிக் சமூக சேவைகள் நிறுவனத்தின் தலைமையகத்தில் அதன் தலைவர் அஷ்ஷெய்க் எல்.ரீ.எம்.ஹலீம் தலைமையில் விஷேட துஆ பிராத்தனை இடம்பெற்றது.

இதன்போது கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் பாலைநகர் கிராமத்தில் வாழும் அனைத்து சமூக மக்கள் இருநூற்றி ஐம்பது பேருக்கு உலர் உணவு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

No comments: