News Just In

4/13/2020 09:45:00 PM

கல்லடி ஸ்ரீ சித்தி விநாயகர், பேச்சியம்மன் ஆலயங்களில் இடம்பெற்ற புதுவருட பூஜை நிகழ்வுகள்


இந்துக்கள் தங்களது வாழ்வியலை அறிவியலுடன் பிணைத்தே பயணிக்க ஆரம்பித்தனர், சூரியன் 12 இராசிகளுக்கும் பிரவேசிக்கும் காலத்தினை 12 மாதங்களாக வகுத்தனர், அதில் முதலாவது இராசியான மேஷராசிக்கு பிரவேசிக்கும் புண்ணிய காலத்தினை "மேஷ சங்கிராந்தி" என புதுவருடப்பிறப்பினை கொண்டாடுகின்றனர்.

மருத்துநீர் தேய்த்து, புத்தாடை அணிந்து, கைவிசேடம் கொடுத்து, ஆலய தரிசனம் செய்து அறிவியல் ரீதியாக பொருள் பொதிந்த பண்டிகையாக சித்திரை புத்தாண்டை கொண்டாடும் மக்களுக்கு தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக வீடுகளில் கொண்டாட்டங்களை மட்டுப்படுத்த வேண்டிய கட்டாய நிலை உள்ளது.

இந்த தொற்று நோய் நீங்கி சுபீட்சம் பெற பல ஆலயங்களில் வழிபாடுகள் நடைபெறுகின்றன. கல்லடி, உப்போடை-நொச்சிமுனை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் புது வருடத்தினை முன்னிட்டு பூஜை நிகழ்வுகளுடன், யாக பூஜையும் இடம்பெற்றது.


நாட்டில் ஏற்பட்டுள்ள நோய் நீங்கி மக்கள் அனைவரும் சுகம்பெற்று வாழவேண்டி யாகபூஜையும் புதுவருடப் பிறப்பினை முன்னிட்டு பேச்சியம்மன், விநாயகர் ஆலயங்களில் வருடப்பிறப்பு பூஜைகளும் இடம்பெற்றன.











No comments: