News Just In

4/23/2020 05:42:00 PM

சௌபாக்கியா நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மரக்கறிப் பயிர்நாற்றுகள் விநியோகம்


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
சுதேச உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் அரசு அறிமுகப்படுத்தியுள்ள சௌபாக்கியா நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மரக்கறிப் பயிர் நாற்றுகள் ஏறாவூர் நகர விவசாயப் போதனாசிரியர் பிரிவில் விநியோகிக்கப்பட்டன.

விவசாயப் போதனாசிரியை எம்.எச். முர்ஷிதா ஷிரீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 225 குடும்பங்களுக்கு கத்தரி, கறி மிளகாய், மிளகாய் போன்ற மரக்கறிப் பயிர்களின் நாற்றுக்கள் தலா ஐந்து என்ற விகிதத்தில் விநியோகிக்கப்பட்டன.

இவை அடுத்த இரு மாதங்களுக்குள் சிறந்த அறுவடையைத் தரக்கூடிய மரக்கறிப் பயிர்கள் எனவும் இவற்றைக் கொண்டு நாளாந்த சமையலுக்குப் போதுமான மரக்கறித் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும் என விவசாயப் போதனாசிரியை முர்ஷிதா ஷிரீன் நாற்றுக்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் பயனாளிகளிடம் தெரிவித்தார்.

நாற்றுக்கள் விநியோக நிகழ்வில் கமநல சேவைகள் அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே. ஜஹன்னாத் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எம்.  அல் அமீன், நிர்வாக உத்தியோகத்தர் எஸ். அப்துல் றஹீம், கமநலசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஈ. தர்ஸ்குமார், விவசாய அபிவிருத்தி ஆராய்ச்சி உதவியாளர் எஸ். கௌதமி, கிராம சேவகர் யூ.எல். ஸாஹிர் ஹூஸைன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


No comments: