News Just In

4/30/2020 01:19:00 PM

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமரால் அவசர அழைப்பு!!


நாட்டின் தற்போதைய நிலை குறித்து கலந்துரையாடுவதற்காக கடந்த நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் வகித்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அவசரமாக பிரதமர் அழைத்துள்ளார்.

கலந்துரையாடலுக்காக எதிர்வரும் திங்கட்கிழமை அலரிமாளிகைக்கு வருமாறு கடந்த நாடாளுமன்றத்தை அங்கத்துவப்படுத்திய 225 உறுப்பினர்களுக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி இந்த கலந்துரையாடல் எதிர்வரும் திங்கட்கிழமை முற்பகல் 10 மணிக்கு அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது.

No comments: