கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 5 லட்சத்து 71 ஆயிரத்து 145 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனால் இந்த கொடிய வைரசு தொற்று காரணமாக இதுவரை ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 261 பேர் பலியாகியுள்ளனர்.
சீனாவில் இருந்து பரவிய இந்த வைரஸ் அமெரிக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. உலக அளவில் வைரஸ் பரவியவர்கள் மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
தற்போதைய நிலவரப்படி, அமெரிக்காவில் 7 லட்சத்து 10 ஆயிரத்து 021 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. குறிப்பாக நேற்று (17) ஒரே நாளில் புதிதாக 32 ஆயிரத்து 165 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று (17) ஒரே நாளில் 2 ஆயிரத்து 535 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை அமெரிக்காவில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 158 ஆக அதிகரித்துள்ளது.

No comments: