News Just In

4/26/2020 02:15:00 PM

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 467ஆக அதிகரிப்பு!

இலங்கையில் இன்று 07 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 467ஆக அதிகரித்துள்ளது.

கடந்த மார்ச் 11 ஆம் திகதி முதல் தற்போது வரை 467பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில் இவர்களில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

120 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான 340பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: