நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக தமது வருமானங்களை இழந்துள்ள அன்றாடம் தொழிலில் ஈடுபடுகின்ற மட்டக்களப்பு மாவட்டத்தின் தாந்தாமலை, 38 ஆம் கொலனி, கோட்டைக்கல்லாறு மற்றும் மட்டக்களப்பின் சில புறநகர் பகுதிகளை சேர்ந்த 200 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிவைக்கப்பட்ட்து.
முன்னாள் மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க லண்டனை அமைவிடமாக கொண்டு இயங்கும் MIOT அமைப்பின் சார்பாக Dr.வேலாயுதப்பிள்ளை, Dr.நிரஞ்சன, Dr காந்தா நிரஞ்சன் மற்றும் MIOT உறுப்பினர்களின் நிதியுதவி மூலம் ரூ230,000/- பெறுமதியான உலர் உணர்வு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் MIOT அமைப்பினால் வழங்கப்பட்ட இந்த உதவிக்கு மக்கள் தமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
4/30/2020 08:40:00 AM
Home
/
உள்ளூர்
/
மட்டக்களப்பு
/
முன்னாள் அரச அதிபா் மா.உதயகுமாா் அவா்களின் வேண்டுகோளின்படி 200 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிவைப்பு
முன்னாள் அரச அதிபா் மா.உதயகுமாா் அவா்களின் வேண்டுகோளின்படி 200 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிவைப்பு
Subscribe to:
Post Comments (Atom)





No comments: