News Just In

4/25/2020 09:17:00 PM

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்றுமுன்னர் 449ஆக அதிகரிப்பு!

இலங்கையில் மேலும் 09 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 449ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் கடந்த மார்ச் 11 ஆம் திகதி முதல் தற்போது வரையான காலப்பகுதியில் 449பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில் இவர்களில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

118 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான 324பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: