News Just In

4/24/2020 08:44:00 AM

இன்று இரவு 8 மணி முதல் மீண்டும் அமுலுக்கு வரும் ஊரடங்கு சட்டம்


இலங்கை முழுவதும் இன்று மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இன்று இரவு 8.00 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை காலை மீண்டும் தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வார இறுதியான 25 மற்றும் 26ஆம் திகதிகளில் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய இதுவரையில் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் தொடர்பில் ஞாயிற்று கிழமை மாலை அறிவிக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

No comments: