யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டம் அமுலிலிருக்கும்போது இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்பில் 7 பேர் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 6 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில், யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றை உடைத்து புகுந்து அங்கிருந்த சிசிரிவி கமெரா, மின்பிறப்பாக்கி மற்றும் இலத்திரனியல் பொருட்கள் திருடப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில், யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி முனசிங்க தலைமையிலான குழுவினர் நடத்திய விசாரணைகளின்போது நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 25 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டார்
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணைகளின் அடிப்படையில் கடந்த வாரம் யாழ்ப்பாணம் சோமசுந்தரம் வீதியைச் சேர்ந்த ஒருவர் தனது ஓய்வூதியப் பணத்தை எடுப்பதற்காக யாழ். நகரத்துக்குச் சென்றிருந்தபோது அவரின் வீட்டுக்குள் புகுந்து தொலைபேசி, கடன் அட்டை மற்றும் பெறுமதியான பொருட்களைத் திருடிய சம்பவம் தொடர்பில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.|
இந்நிலையில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் 7 பேர் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடமிருந்து 6 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களும் யாழ்ப்பாண குற்றத் தடுப்பு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
சந்தேக நபர்களை விசாரணைகளின் பின்னர் நீதிவானிடம் முன்னிலைப்படுத்தவுள்ளதாக யாழ். குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் இன்ஸ்பெக்டர் முனசிங்க தெரிவித்தார்.
4/14/2020 01:44:00 PM
Home
/
உள்ளூர்
/
யாழ்ப்பாணம்
/
ஊரடங்கின்போது பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருட்டு; 7 பேர் கைது!
ஊரடங்கின்போது பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருட்டு; 7 பேர் கைது!
Subscribe to:
Post Comments (Atom)



No comments: