News Just In

4/28/2020 07:14:00 AM

இன்று அதிகாலை 5.00 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு


கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய கொவிட் 19 இடர் வலயங்களை தவிரந்த ஏனைய மாவட்டங்களில் அமுலில் இருந்த ஊரடங்கு உத்தரவு இன்று அதிகாலை 5.00 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது.

அத்தோடு, குறித்த பகுதிகளுக்கு இன்றிரவு 8.00 மணிக்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும்.

இந்நிலையில், குறித்த மாவட்டங்களுக்கு எதிர்வரும் மே 1ஆம் திகதி வரை அதிகாலை 5.00 மணி தொடக்கம் 8.00 மணிவரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் மே 4ஆம் திகதி அதிகாலை 5.00 மணிக்கு தளர்த்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: