இன்றைய தினம் மட்டும் 45 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்
இந்நிலையில் இலங்கையில் இதுவரை 505 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 378 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதேவேளை, 273 பேர் சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளதுடன் இதுவரை 120 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இலங்கையில் கொரோனா தொற்றினால் 7 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்றானது தற்போது விரைவாக பரவிக்கொண்டிருப்பதால் பொது மக்கள் மிக அவதானத்துடன் செயற்படுமாறும் சுகாதார நடைமுறைகளை சரியான முறையில் பின்பெற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments: