News Just In

4/03/2020 05:28:00 PM

இலங்கையைச் சேர்ந்த 33 தப்லீக் ஜமாத் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களின் விசாக்கள் கறுப்புப் பட்டியலில்!!


இலங்கையைச் சேர்ந்த 33 பேரின் வீசாக்களை இந்தியா கறுப்புப் பட்டியலில் இணைத்துள்ளது. தப்லீக் ஜமாத் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களின் விசாக்களையே இந்தியா கறுப்பு பட்டியலில் இணைத்துள்ளது.

இந்தியாவின் புதுடெல்லி நிஜாமுதீன் பகுதியில் இடம்பெற்ற தப்லீக் ஜமாத் அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கே கொரோனா பரவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையிலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதில் ஒன்பது இங்கிலாந்தவர், நான்கு அமெரிக்கர், 379 இந்தோனிஷியர், 110 பங்களாதேஷ் நாட்டவர்கள் மற்றும் 63 மியன்மார் நாட்டவர்களின் வீசாக்களே கறுப்பு பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.

No comments: