19 மாவட்டங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நாளை காலை 6 மணிக்கு நீக்கப்படும், மாலை 4 மணிக்கு மீண்டும் விதிக்கப்படும். அதே பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 20 திங்கட்கிழமை காலை 6 மணிவரை நீடிக்கப்படவுள்ளது.
அந்த வகையில் கொரோனா வைரஸ் இடர் வலயங்களாக அறிவிக்கப்பட்ட கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: