News Just In

4/04/2020 09:04:00 AM

ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைதானோரின் எண்ணிக்கை 12,223ஆக அதிகரிப்பு!!

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த அமுலாக்கப்பட்ட ஊரடங்குச் சட்டத்தை மீறி நடந்த குற்றச்சாட்டில் 12,223 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 3,017 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 20ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரையிலான காலப்பகுதியிலே இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.

இதேவேளை, நேற்று (03) காலை 6.00 மணி முதல் இன்று (04) காலை 6.00 மணி வரையான 24 மணித்தியால காலப்பகுதியினுள் 1,493 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 360 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

No comments: