குடும்பத் தகராறு காரணமாக இரு தரப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பில் 26 வயதுடைய ஒருவர் நேற்றிரவு (13) உயிரிழந்துள்ளார்.
கெப்பித்திகொல்லாவ, இகிரிகொல்லேவ, கோனுகத்தனாவ பகுதியில் இடம்பெற்ற புத்தாண்டு மது விருந்துக் கொண்டாட்டம் காரணமாக ஏற்பட்ட கைகலப்பின்போது, கூரிய ஆயுதமொன்றினால் நபரொருவர் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உட்பட 05 பேரைக் கைது செய்துள்ள பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
4/14/2020 12:12:00 PM
புத்தாண்டு மது விருந்துக் கொண்டாட்டத்தில் ஒருவர் வெட்டிக் கொலை! 05 பேர் கைது!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments: