News Just In

3/13/2020 08:53:00 AM

கனடா நாட்டுப் பிரதமரின் மனைவிக்கு கொரோனா வைரஸ் தொற்று! தனிமைப்படுத்த தீர்மானம்!!

கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அண்மையில் பிரிட்டனில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு திரும்பிய ஜஸ்டின் ட்ரூடோ மனைவி சோபிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் அடுத்த 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.

No comments: