-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
மட்டக்ளப்பு மாவட்ட செயலகம், மாவட்ட ஊடகப் பிரிவின் ஏற்பாட்டில், இலங்கைப் பத்திரிகைப் பேரவை (Sri Lanka Press Council) அனுசரணையுடன் மட்டக்களப்பில் இடம்பெறவிருந்த மாகாண ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலக ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
'தேசிய அபிவிருத்தியும் ஊடகவியலாளர்களின் பங்கும்' எனும் தொனிப்பொருளில் மாகாண ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு எதிர்வரும் 21.03.2020 சனிக்கிழமை முழுநாளும் மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இருப்பினும் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று நோய், அதற்கான தனிமைப்படுத்தும் நிகழ்வுகள் இடம்பெற்று வருவதனால் மாகாண ஊடகவியலாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள செயலமர்வு ஒத்திவைக்கப்படுகின்றது. இந்த செயலமர்வு மீண்டும் நடைபெறும் திகதி பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
3/18/2020 11:02:00 AM
Home
/
உள்ளூர்
/
மட்டக்களப்பு
/
மாவட்ட செயலகம்
/
மாகாண ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு கால வரையறையின்றி ஒத்திவைப்பு!!
மாகாண ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு கால வரையறையின்றி ஒத்திவைப்பு!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments: