கொரோனா உயிர்க் கொல்லி வைரஸ் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கையாக மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் கை கழுவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக மாவட்டச் செயலக ஊடகப் பிரிவு அறிவித்தள்ளது.
பொதுநிர்வாக உள்நாட்டு உள்ளுராட்சி அலுவல்கள் மாகாண சபைகள் அமைச்சின் சுற்று நிருபத்தின் பிரகாரம் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலுவலகங்கள் பொது இடங்களில் கைகளை கழுவும் வசதியினை ஏற்படுத்தும் செயல்பாடு நாடு முழுவதும் செயல்படுத்தும் படி பணிக்கப்பட்டதற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திலும் கை கழுவும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட செயலகத்தைப் பயன்படுத்தும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் அங்கு வருகை தரும் பொதுமக்கள் தமது கைகளை சுத்தப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள கொரொனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக மக்கள் அதிகளவாக கூடுகின்ற இடங்களில் எல்லாம் தொற்றுக்கிருமிகளை கட்டுப்படுத்தும் வகையில் கைகளை கழுவும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







No comments: