News Just In

3/03/2020 02:53:00 PM

கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு!


வீட்டு கிணறு ஒன்றில் இருந்து இன்று (3) பெண்ணொருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மேற்படி சடலமானது வவுனியா மகாரம்பைக்குளம் மதினா நகர் பகுதியில் உள்ள வீட்டு கிணறு ஒன்றிலிருந்தே இந்தச் சடலம் மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக காணப்பட்டவர் மூன்று பிள்ளைகளின் தாயாரான 59 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments: