News Just In

3/29/2020 03:03:00 PM

கொக்கட்டிச்சோலை, தாந்தாமலை ஆலயங்கள் இணைந்து நிர்க்கதியாகியுள்ள மக்களுக்கு நிவாரண உதவி

தேசத்துக் கோயில்களான கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம் மற்றும் தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயம் என்பன இணைந்து நெருக்கடியான சூழ்நிலையில் நிர்க்கதியாகியுள்ள மக்களுக்கான நிவாரண உதவியாக முதற்கட்டமாக ஒரு தொகுதி அத்தியாவசியப் பொருட்களை இன்று (29) பட்டிப்பளை பிரதேச செயலாளரிடம் கையளித்தனர்.

அரிசி, பருப்பு, கோதுமை மா, சீனி, சவர்க்காரம் போன்ற பல அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய ஒவ்வொன்றும் 1000 ரூபா பெறுமதியான 1050 பொதிகள் இதன்போது வழக்கிவைக்கப்பட்டன.

இதேபோல, நாளைய தினம் (30) வவுணதீவு பிரதேச செயலாளரிடமும் மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments: