News Just In

3/16/2020 09:39:00 PM

கல்லடி விபத்தில் ஒருவர் கவலைக்கிடம்!


மட்டக்களப்பு கல்லடி பிரதான வீதியில் இன்று மாலை ஏற்பட்ட விபத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் படுகாயம் அடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீதியால் நடந்து சென்ற முதியவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது அதன்போது முதியவர் கீழே விழுந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளின் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் விழுந்து கிடந்த முதியவர் மீது  திரும்பவும் எறியுள்ளது, இதனால் படுகாயமடைந்த முதியவர் கவலைக்கிடமான முறையில் அம்பியூலன்ஸ் வண்டியில் அழைத்து செல்லப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments: