News Just In

3/20/2020 09:13:00 AM

தமிழ் மக்களுக்கு துரோகம் செய்தவர்களே தாமரை மொட்டில் களமிறங்கியுள்ளனர்-கருணா அம்மான்

(கிருஷ்ணகுமார்)
தமிழ் தேசிய கூட்டமைப்பில் சேர்ந்து வெற்றிபெற்றதன் தமிழ் மக்களுக்கு துரோகம் செய்துவிட்டுச்சென்றவர்களே இன்று தாமரை மொட்டில் களமிறங்கியுள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி இன்று வேட்பு மனுவினை தாக்கல் செய்ததது.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி சார்பில் தலைமை வேட்பாளராக திருமதி வித்தியாபதி முரளிதரன் தலைமையில் கட்சியின் வேட்புமனுக்கல் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வேட்பு மனுத்தாக்கலில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் முக்கியஸ்தர்கள்,கட்சி ஆதரவாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த முரளிதரன்,

வுடகிழக்கில் எமது கட்சி போட்டியிடுகின்றது.அதிலும் திருகோணமலை அம்பாறை மாவட்டங்களில் கூட்டணி அமைத்துபோட்டியிடுகின்றோம்.வன்னி மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித்துபோட்டியிடுகின்றோம்.

கிழக்கு மாகாணத்தில் அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து அனைவரையும் ஒரே கட்சியில் பயணிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டபோதிலும் யாரும் முன்வரவில்லை.

இந்த தேர்தலில் போட்டியிடுபவர்களில் அதிகளவான அபிவிருத்திகளை மக்களுக்கு சேவைசெய்தவன் நான் என்ற வகையில் இன்று உரிமையுடன் களமிறங்கியுள்ளோம்.பல வேலைத்திட்டங்களை காட்டித்தான் இன்று எமது கட்சி களமிறங்கியுள்ளது.

இன்று எத்தனையோ கட்சிகள் தங்களை அரசியல் கட்சியென்று சொல்லிக்கொண்டு பதவி மோகத்திற்காக இன்று களத்தில் இறங்கியுள்ளனர்.

தேசிய கட்சியில் பயணிப்பதை நாங்கள் ஒருபோதும் விரும்பவில்லை.அதனால்தான் தனித்துவமான கட்சியை ஆரம்பித்து அரசியல் களத்தில் இறங்கியுள்ளோம்.மத்திய அரசாங்கத்துடன் ஒரு இணக்கப்பாடுடன் கூடிய அரசியலை முன்னெடுக்கும் வகையில் நாங்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்:ளோம்.

தாமரை மொட்டுகள் கட்சியெல்லாம் இன்று வேட்பாளர் பற்றாக்குறை காரணமாக மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர். ஆதில் இருப்பவர்கள் அனைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் வாக்குகளைப்பெற்று தமிழ் மக்களுக்கு துரோகம் செய்துசென்றவர்கள்தான் தாமரை மொட்டில் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.மக்கள் இவர்களை தமிழ் மக்கள் தோற்கடிக்கவேண்டும்.

ஏனைய கட்சிகள் தொடர்பிலும் மக்கள் புரிந்துகொண்டு எதிர்காலத்திhல் எங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கவேண்டும்.நாங்கள் ஒரு ஆசனத்தினைப்பெற்றுக்கொள்வோம்.அம்பாறை மாவட்டத்தில் எனது வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளது.

துமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்கள் பற்றாக்குறை காரணமாக பல கட்சிகளுக்கு தாவிச்சென்றவர்களை வேட்பாளராக கொண்டுவந்துள்ளது.தமிழ் மக்களை ஏமாற்றும் வித்தையாகவே நான் பார்க்கின்றேன்.தமிழ் தேசிய கூட்டமைப்பு வடகிழக்கில் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்யவில்லை.

தேர்தலை ஒத்திவைப்பதற்கான கூடுதலான வாய்ப்பிருக்கின்றது.தற்போது கொரணா வைரஸ் என்பது பரவிவருவதன் காரணமாக நான்கு வாரங்கள் தேர்தலை ஒத்திவைக்கப்படலாம்.








No comments: