மக்கள் வாழும் நாட்டில் தான் தேர்தல் நடத்த முடியும். கொரோனா வைரஸ் பரவும் நிலையில் நாட்டின் தேர்தல் குறித்து சிந்திக்க முடியவில்லை. பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் மறுஅறிவித்தல் வரை எந்தவிதமான நடவடிக்கைகளையும் தேர்தல் செயலகம் முன்னெடுக்கவில்லை எனவும்
பொதுத் தேர்தலை காலவரையறையற்ற விதத்தில் பிற்போடத் தீர்மானித்திருப்பதாகவும் தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தலை எப்போது நடத்த முடியும் என்பதை தெரிவிக்க முடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்....
அடுத்த இரண்டு மாதங்களில் இந்த நோயிலிருந்து நாடு விடுபட்டாலும் கூட உடனடியாக தேர்தலை நடத்த முடியாது. கொரோனா தொற்று வைரஸ் நோய்க்கு எதிராக நாடு பெரும் போரொன்றுக்கு முகம் கொடுத்துள்ளது. இந்த கொடிய நோயிலிருந்து முற்று முழுதாக மீளும்வரை தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பே கிடையாது.
இது தொடர்பில் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி இடம்பெறவுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய கூட்டத்தில் அரசாங்கத்துடனும், அரசியல் கட்சிகளுடனும் கலந்துயாடிய பின்னரே தேர்தல் குறித்து தீர்க்கமான முடிவுக்கு வரக்கூடியதாக இருக்கும். ஏப்ரல் 30ஆம் திகதியன்று முக்கியமான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட எண்ணியுள்ளோம்.
இத்தகைய பேரிடர் காலத்தை எதிர்கொண்டிருக்கும் நிலையில் தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை உறுதியாக தெரிவிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
3/27/2020 08:32:00 AM
பொதுத் தேர்தலை காலவரையறையற்ற விதத்தில் பிற்போடத் தீர்மானம்!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments: