News Just In

3/16/2020 05:07:00 PM

ஆரையம்பதியில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்

தேசிய சேமிப்பு வங்கி ஆரையம்பதி கிளையினால் சர்வதேச மகளிர் தினம் 13.03.2020 அன்று ஆரையம்பதி வைத்தியசாலை மண்டபத்தில் 'போற்றிடுவோம் ஸ்தீரி' எனும் தொனிப் பொருளில் கொண்டாடப்பட்டது.

இந் நிகழ்வில் பிhதம அதிதியாக வைத்திய அதிகாரி Dr.பிரான்சிஸ் அல்மேடா கலந்து கொண்டதுடன் தேசிய சேமிப்பு வங்கியின் முகாமையாளர் திரு.A.A.அன்றாடோ மற்றும் ஊழியர்கள் , வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள், தேசிய சேமிப்பு வங்கியின் வாடிக்கையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் மகளிர் எதிர்கொள்ளும் சவால்கள், சாதனைகள் பற்றியும் தற்போதைய காலத்தில் பெண்களின் வகி பங்கு தொடர்பாக சிறப்புரை ஆற்றியதுடன் வைத்திய அதிகாரியினால் தற்போதைய கொரோனா வைரஸின் தாக்கம் அவற்றிலிருந்து விடுபடுவதற்கு நாம் மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பாக விளக்கம் கொடுக்கப்பட்டது.

அதே போன்று தேசிய சேமிப்பு வங்கியான மகளிர் மாதத்தில் பெண்களுக்கு வழங்குகின்ற சலுகைகள் சமூகப் பொறுப்பை நிறைவேற்றும் பொருட்டு தேசிய சேமிப்பு வங்கியால் மேற்கொள்ளப்படும் நடைமுறைகள், வங்கி வாடிக்கையாளர்களுக்கிடையிலான உறவுமுறை தொடர்பான விளக்கம் வங்கி முகாமையாளரால் வழங்கப்பட்டதுடன்

தற்கால உலகில் மகளிர் வங்கியுடன் பேண வேண்டிய தொடர்பு நிதிவசதி மற்றும் நிதி ஆலோசனைகளை தேசிய சேமிப்பு வங்கி எவ்வாறு வழங்குகின்றது என்பது பற்றி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.

மகளிர் தினத்தை சிறப்பிக்கும் முகமாக சிறந்த வாடிக்கையாளர்கள், மற்றும் தன்நலம் பாராது சிறந்த சேவைகளை வழங்கி கொண்டிருக்கும் பெண் தாதிய உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் முகமாக கௌரவச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

No comments: