நாகர்கோவில் கடற்பிராந்தியத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கடலில் மிதந்துகொண்டிருந்த கேரள கஞ்சா மீட்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட போதைப்பொருட்கள் காங்கேசன்துறை பொலிஸாரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மதுவரி திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: