News Just In

2/22/2020 03:37:00 PM

மட்டக்களப்பில் பயணிகளுக்கான "சவாரி" செயலி (Savari App) அறிமுகம்!!


மட்டக்களப்பு மாவட்டத்தில் புதியதொரு ஆரம்பமாக சவாரி போக்குவரத்து செயலி (Savari Grand App Launch ) வெளியீட்டு நிகழ்வு இன்று கல்லடியில் Maxmetrics Vetures (P) Ltd இயக்குனர் தேவதாசன் மயூரன் தலைமையில் நடைபெற்றது.

இவ் செயலியை இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இராசமாணிக்கம் சாணக்கியனின் 2030ஆம் ஆண்டின் மட்டக்களப்பு மாவட்டத்தின் இலக்கு (Vision for Batticaloa 2030) என்னும் அமைப்பும் மற்றும் தேவதாசன் மயூரனின் Maxmetrics Ventures (P) Ltd இன் மூல துணை நிறுவனமான Myooou Cyber Solutions எனும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் இணைய, டிஜிட்டல் சந்தைப்படுத்தும் நிறுவனமும் இணைந்து இவ் சவாரி செயலியை மட்டக்களப்பில் அறிமுகப்படுத்தி உள்ளார்கள்.

இவ் செயலியானது பொதுமக்கள் மற்றும் சாரதிகளை செயலிமூலமாக இணைத்து போக்குவரத்தை இலகுபடுத்தும் நோக்கிலும் இந்த சவாரி செயலி மக்களது பாவனைக்காக இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அப் ஊடாக முச்சக்கர வண்டி, கார், வேன் போன்ற வாகனங்களை பயணிகள் தங்கள் கையடக்க தொலைபேசி செயலி வாயிலாக தெரிவுசெய்து தங்களது இருப்பிடத்தில் இருந்தே விரும்பிய இடங்களுக்கு பயணம் செய்யலாம்.

சவாரி செயலியினால் மக்களுக்கான நன்மைகள்

⦁ நியாயமான விலையில் துரிதபயணங்கள்

;குறைத்த செலவில் விரைவாக காத்திருப்பு இன்றி உங்கள் பயணங்களை மேற்கொள்ளலாம்

⦁ இருக்கும் இடத்தில் சவாரியை பெற்று கொள்ளும் வாய்ப்பு

நீங்கள் எங்கு இருந்தாலும் உங்கள் இருக்கும் இடத்தில் எந்நேரத்திலும் உங்கள் பயணத்துக்கு தேவையான வாகனத்தை பெற்றுக்கொள்ளும் வசதி

⦁ பாதுகாப்பான பயணங்கள்

எந்த நேரங்களிலும் இரவு நேரங்களிலும் கூட பாதுகாப்பான பயணத்துக்கு

⦁ நம்பகத்தன்மையான சாரதிகள்

எங்களிடம் பதிவு செய்து உறுதிப்படுத்தப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்ட சாரதிகள்

⦁ துல்லியமான மற்றும் நேரவிரயமற்ற பயணங்கள்

நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை முன்கூட்டியே குறிப்பிடு நேரவிரயமற்ற பயணங்களை மேற்கொள்ளலாம்

சவாரி செயலியினால் சாரதிகளுக்கான நன்மைகள்

⦁ அதிக சவாரிகளை இலகுவாக பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு

இலகுபடுத்தப்பட்ட சவாரி செயலியை பயன்படுத்தும் பயணிகள் ஊடக அதிக சவாரிகளை பெற்று கொள்ளும் வாய்ப்பு

⦁ சுய தொழிலை ஊக்குவித்து வாழ்க்கைத்தரத்தை உயர்த்துதல்

சவாரி செயலி தொழில்நுட்பத்தின் வரைமுறையின் ஊடக உங்களுக்கு தேவையான சவாரிகளை பெற்று உங்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தலாம் ...

⦁ வீணான அலைச்சல் இன்றி சவாரிகளை பெற்றுக்கொள்ளலாம்

இருக்கும் இடத்தில் இருந்தே சவாரி செயலி ஊடாக உங்கள் சுற்று வட்டாரத்தில் இருக்கும் சவாரிகளை பெற்றுக்கொள்ளலாம்

⦁ திருப்திகரமான முறைப்படுத்தப்பட்ட கட்டண முறைமைகள்

மக்கள் மற்றும் வாகன சாரதிகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான கட்டணங்கள்

⦁ விரும்பிய நேரத்தில் சவாரியின் மூலம் சவாரிகளை பெற்றுக்கொள்ளலாம்

• உங்கள் தேவைக்கு ஏற்றாற்போல் உங்களுக்கு தகுந்த நேரத்தில் சவாரி செயலியை பயன்படுத்தும் வசதி.

வெளிநாடுகளிலும், கொழும்பு போன்ற மாநகரங்களில் அநேகமான பொதுமக்கள் இவ்வாறான செயலிகளை இணையம் வாயிலாக பயன்படுத்தி தங்களது பயணங்களை இலகுபடுத்துகின்றனர். இதுபோன்று தற்போது மட்டக்களப்பு மக்களும் பாதுகாப்பான மற்றும் நேரச் சிக்கனமான பயணங்களை சவாரி செயலி வாயிலாக பெற்றுக்கொள்ள முடியும் என்கின்றனர் சவாரி நிறுவனத்தினர்.

இந்த வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், அழைப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், இராசமாணிக்கம் அமைப்பின் தலைவர் சாணக்கியன், மாநகர உறுப்பினர்கள், சவாரி நிறுவன ஊழியர்கள் மற்றும் வாகன சாரதிகள் கலந்து கொண்டனர்.

























No comments: