News Just In

2/22/2020 03:58:00 PM

மட்டு மாநகர சபையின் கழிவகற்றல் பிரச்சினைக்கு தீர்வுகாண சீமெந்து நிறுவனத்தாருடனான கலந்துரையாடல்


மட்டக்களப்பு மாநகர சபையானது பலகாலமாக திண்மக் கழிவகற்றல் பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றது. இந்நிலையில் குறித்த கழிவகற்றல் பிரச்சனைகளை குறைக்கும் வகையில் தனியார் சீமெந்து நிறுவனம் ஒன்றின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் ஒன்று (20.02.2020) இன்று மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.

குறிப்பாக திண்மக் கழிவகற்றல் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அக்கழிவுகளை கொள்வனவு செய்து கொள்வதோடு, அவற்றை முறையாகத் தரம் பிரிப்பதற்கான தொழிநுட்ப உதவிகளையும் வழங்குவதாக மேற்படி தனியார் சீமெந்து நிறுவனத்தின் பொது முகாமையாளர் உறுதியளித்தார்.

அத்துடன் திண்மக் கழிவுகளை பொடியாக்குவதற்கு தேவையான இயந்திர உதவிகளையும், ஊழியர்களுக்கான பயிற்சிகளையும் வழங்குமாறும் அவர்களிடம் மாநகர முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.

குறித்த கலந்துரையாடலில் மாநகர ஆணையாளர் க.சித்திரவேல், மற்றும் தனியார் சிமெந்து நிறுவனத்தின் பொது முகாமையாளர் உள்ளிட்ட குழுவினரும் கலந்து கொண்டிருந்தனர்.




No comments: