இலங்கையில் காணப்படும் 107 பஸ் டிப்போக்களிலும் இந்த கட்டண மோசடி இடம்பெறுவதாக சுட்டிக்காட்டிய அவர், அடுத்த ஆறு மாதங்களுக்குள் சகல மோசடிகளையும் தடுத்து, ஏற்படக்கூடிய இழப்பை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இ.போ.சபை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றியமைக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் பஸ்களை சோதனையிட திடீர் குழுவொன்று
அமைக்கப்பட்டுள்ளது. இது தற்போதுள்ள சோதனைக் குழுக்களுக்கு முற்றிலும் மாறுபட்ட குழுவாகவே அமையும் எனக் குறிப்பிட்டார்.
அமைக்கப்பட்டுள்ளது. இது தற்போதுள்ள சோதனைக் குழுக்களுக்கு முற்றிலும் மாறுபட்ட குழுவாகவே அமையும் எனக் குறிப்பிட்டார்.
குறித்த குழு அண்மையில் கம்பஹா டிப்போவுக்குச் சொந்தமான பஸ் வண்டியை கடவத்தையில் வைத்து சோதனையிடுகையில் அன்றைய தினத்தின் சேவையில் மட்டும் நடத்துனர் பத்தாயிரம் ரூபாவை மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாக அந்த நடத்துனர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டார்.
கடந்த ஒருவார காலத்துக்குள் 15 நடத்துனர்கள் மோசடியில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கடந்த ஒருவார காலத்துக்குள் 15 நடத்துனர்கள் மோசடியில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

No comments: