News Just In

2/04/2020 09:58:00 PM

மட்டக்களப்பில் விஷேட அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்பு- சாரதிகள் பலர் பிடிபட்டனர்


ஏ.எச்.ஏ. ஹுஸைன் 
விஷேட அதிரடிப்படையினர் மட்டக்களப்பு பதுளை வீதியை அண்டிய கித்துள் ஆற்றுப் பகுதியில் சட்ட விரோதமான முறையில் ஆற்று மணல் ஏற்றிய 8 உழவு இயந்திரங்களைக் கைப்பற்றியதோடு அதன் சாரதிகளையும் கைது செய்து தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

விற்பனைக்காக, சட்ட விரோதமான முறையில் ஆற்று மணல் அகழப்படுவதாக தமக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பிரகாரம் ஸ்தலத்திற்குச் சென்று மறைந்திருந்த விஷேட அதிரடிப்படையினர் சடுதியாக மறைவிலிருந்து வெளியே வந்தபோது இந்த சட்ட விரோத மணல் அகழ்வாளர்களை உழவு இயந்திரங்களுடன் கைது செய்துள்ளனர்.

கரடியனாறு பொலிஸ் பிரிவின் கித்துள் ஆற்றுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 02.02.2020 இடம்பெற்ற இச்சம்பவம்பற்றி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

No comments: