
மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுவாஞ்சிகுடி விநாயகர் வித்தியாலயத்தின் மெய்வல்லுனர் இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று (10.02.2020) திகதி பாடசாலை அதிபர் நா.நடேசன் தலைமையில் களுவாஞ்சிகுடி பொது விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
அஞ்சுகம், கோகிலம், மயூரம் ஆகிய மூன்று இல்லங்களுக்கிடையேயும் போட்டிகள் நடைபெற்றது. இங்கு நடைபெற்ற போட்டிகளின் புள்ளி அடிப்படையில் முறையே அஞ்சுகம், கோகிலம், மயூரம் என முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்றுக்கொண்டது. மாணவர்களின் பாண்ட் வாத்திய அணிவகுப்பு மற்றும் உடற்பயிற்சி கண்காட்சி, மாணவர்களின் விளையாட்டு நிகழ்வுகள் என்பனவும் நடைபெற்றது.
அதிதிகளாக பட்டிருப்பு கல்வி வலய பிரதி கல்விப் பணிப்பாளரும் மண்முனை தென் எருவில் பற்று கோட்டக்கல்விப் பணிப்பாளருமான பு.திவிதரனும், உடற்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் த.இதயகுமார், இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன், ம.தெ.எ.பற்று பிரதேச சபை உறுப்பினர் மே.வினோராஜ் ஆகியோருடன் பட்டிருப்பு கல்வி வலய உத்தியோகஸ்தர்கள், கிராம பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இப்பாடசாலையில் கடந்த ஒன்பது வருடங்களாக இல்ல விளையாட்டுப்போட்டி நடைபெறமல் இருந்து புதிய அதிபர் மற்றும் பாடசாலை சமூகத்தின் ஒத்துழைப்போடு இம்முறை மிகவும் சிறப்பாக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.










No comments: