News Just In

2/06/2020 11:16:00 PM

சாரதி அனுமதிப்பத்திரம்: புதிய கட்டமைப்பை உருவாக்க அமைச்சரவை அனுமதி


சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்குத் தேவையான அனைத்து வைத்திய சான்றிதழ்களையும் அரச வைத்தியசாலைகளில் பெற்றுக்கொள்வதற்கான புதிய கட்டமைப்பை உருவாக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்கள் அறிவிக்கும் ஊடக சந்திப்பு இன்று (வியாழக்கிழமை) அரசாங்கத் தகவல் தினைக்களத்தில் இடம்பெற்றபோதே மேற்கண்ட விடயம் அறிவிக்கப்பட்டது.

இதனடிப்படையில் பிரதான வைத்தியசாலைகள் மற்றும் மாவட்ட வைத்தியசாலைகள் 150இல் இந்தத் திட்டத்தை செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது, வைத்தியசாலைகளில் குறித்த வைத்தியச் சான்றிதழ்களைப் பெறும் பயனாளர்களுக்கு ஒரே இடத்தில் அனைத்துப் பரிசீலனைகளையும் செய்துகொள்ள முடியாதுள்ளது.

இதன் காரணமாக அரச வைத்தியசாலைகளில் குறித்த பரிசீலனைக்காக தனியொரு கட்டமைப்பை மேற்கொள்வது தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தேசியப் போக்குவரத்து வைத்திய நிலையத்தின் நடவடிக்கையினூடாக அரச வைத்தியசாலையில் பயனாளர்களுக்கான பரிசோதனைகளுக்கும் வைத்திய சான்றிதழ்கள் வழங்குவதற்கும் அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்குவதற்காக அரச வைத்தியசாலையில் வசதி வாய்ப்புக்களை உருவாக்க போக்குவரத்துச் சேவை முகாமைத்துவ அமைச்சரினூடாக அமைச்சரவையில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்நிலையிலேயே, இதுதொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

No comments: