News Just In

2/21/2020 06:34:00 PM

மட்டு மேற்கு நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் பாடசாலை மட்டத் தமிழ்த்தினப் போட்டி


மாணவர்களின் ஆற்றல்களை அறிந்து அவர்களைக் கௌரவிக்கும் வகையில் தமிழ்த்தினப்போட்டிகள் பாடசாலை மட்டம், கோட்டமட்டம், வலய மட்டம், மாவட்ட மட்டம், மாகாண மட்டம், தேசிய மட்டமென ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் பாடசாலை மட்ட தமிழ்த்தினப்போட்டிகள் மட்டக்களப்பு மேற்கு வலயத்திற்குட்பட்ட நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் 20.02.2020ம் திகதி வித்தியாலய அதிபர் திரு.தியாகரெத்தினம் அவர்களின் தலைமையில் வெகுசிறப்பாக நடைபெற்றன.

வித்தியாலயத்தின் தமிழ்ப்பாட ஆசிரியர் குழுமத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட இந்நிகழ்வில் வரவேற்புரையினை வித்தியாலயத்தின் பிரதி அதிபராகப் பணியாற்றும் திரு.க.திருச்செல்வம் அவர்கள் நிகழ்த்தினார். அதனை அடுத்து வித்தியாலய அதிபரின் தலைமையுரை இடம்பெற்றது. அதில் அவர் உலக தாய்மொழி தினம் மற்றும் தமிழ் தொழி தினம் பற்றிய கருத்துக்களைக் கூறியதோடு மாணவர்கள் போட்டிகளில் கலந்து தமது ஆற்றல்களை உலகறியச் செய்யவேண்டுமென்று வலியுறுத்தினார்.

உலக தாய்மொழி தினம் பற்றிய கருத்துரை ஆசிரியர் திரு.த.மேகராசா அவர்களால் வழங்கப்பட்டதோடு தமிழ்த்தினப் போட்டிகள் பற்றிய கருத்துரை ஆசிரியர் திரு.அ.நகுசாந்த் அவர்களால் வழங்கப்பட்டது. தொடர்ந்து பாடசாலையின் ஏனைய ஆசிரியர்களையும் உள்வாங்கி அவர்களின் பூரண ஒத்துழைப்புடன் பாடசாலை மட்டப்போட்டிகள் தமிழ்த்தினப்போட்டியின் சுற்றறிக்கைக்கு அமைவான நெறிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வௌ;வேறு இடங்களில் நிகழ்த்துகைகள், எழுத்தாக்கப்போட்டிகள் என சிறப்பாக நடாத்தப்பட்டன. இப்பாடசாலையின் மாணவி மோகன் விதுர்சினி அவர்கள் 2019ம் ஆண்டுக்கான தமிழ்த்தினப்போட்டியில் ஐந்தாம் பிரிவுக்குரிய குறுநாடக ஆக்கப்போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாமிடம் பெற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.


 

 










 












No comments: