News Just In

2/05/2020 10:00:00 AM

ஏறாவூர் பொலிஸ் நிலைய வளாகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மாமரக் கன்றுகள் விநியோகம்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
இயற்கையோடு இணைந்த சகவாழ்வை வலியுறுத்தும் வகையில் மூவினங்களையும் சேர்ந்த மக்களுக்கு முக்கனிகளில் ஒன்றான மாமரங்கள் இலவசமாக விநியோகிக்கப்பட்டதாக ஏறாவூர் நகர வர்த்தகர் சங்கத் தலைவர் செய்னுலாப்தீன் ஆலிம் இனாயத்துல்லாஹ் தெரிவித்தார்.

இலங்கையின் 72வது தேசிய சுதந்திர தினத்தைச் சிறப்பிக்கும் வகையில் ஏறாவூர் பொலிஸ் நிலைய வளாகத்தில் கனி தரும் மாமரக் கன்றுகள் விநியோகம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா, நகர பிரதேச செயலாளர் எஸ்.எம். அல் அமீன், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.எம். ஜயரத்ன ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி எச்.டபிள்யூ.கே ஜயந்த, ஏறாவூர் நகர முதல்வர் ஆர். அப்துல் வாஸித் உட்பட தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகத்தைச் சேர்ந்த பயனாளிகள், ஏறாவூர் நகர வர்த்தகர் சங்கப் பிரதிநிதிகள், ஆகியோரும் கலந்துகொண்டனர்.‪

No comments: