News Just In

2/08/2020 03:00:00 PM

முல்லைத்தீவில் குண்டு வெடிப்பு


முல்லைத்தீவு சிலாவத்தை மாதிரி கிராமம் பகுதியில் சற்று முன்னர் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

சற்று முன்னர் சிலாவத்தை மாதிரி கிராமம் பகுதியில் இருந்து வியாபாரத்துக்கென அபாயகரமான வெடி பொருட்களை எடுத்து வந்து கழட்டி விற்பனை செய்வதற்கு முற்பட்ட வேளையில் மோட்டார் வகையான ஒரு குண்டு வெடித்து சிதறியுள்ளது.

இதன்போது குறித்த குண்டை கழட்டி கொண்டிருந்த நபர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தண்ணீர் ஊற்று , முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய சூசைப்பிள்ளை புலேந்திரன் என்ற நபரே இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளார்

குறித்த நபர் சிலாவத்தை மாதிரி கிராமப்பகுதியில் வசிக்கின்ற தன்னுடைய தாயாருடைய வீட்டின் பின்புறத்தில் வைத்து அபாயகரமான வெடிபொருளை உடைத்து உள்ளே உள்ள மருந்தை எடுத்துக்கொண்டிருந்த வேளையிலேயே குண்டு வெடித்து மேற்படி அனர்த்தம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவ இடத்திற்கு சென்ற முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு இராணுவத்தினர் விசேட அதிரடிப் படையினர் அனைவரும் சென்று குறித்த இடத்தை சோதனையிட்டு வருகின்றனர்.

குறித்த பகுதியில் வெடிப்புச் சம்பவத்தை விட மேலும் பல அபாயகரமான வெடிபொருட்கள் இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது .

No comments: