News Just In

2/04/2020 03:55:00 PM

திருகோணமலைக்கு சென்று கொண்டிருந்த சொகுசு பஸ் குளத்தில் வீழ்ந்து விபத்து!

திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு பஸ் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. பாதையை விட்டு விலகிய குறித்த பஸ் கந்தளாய் குளத்துக்குள் இறங்கியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவமானது இன்று (04) இடம்பெற்றுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் 26, 34, 56 வயதுகளுடைய மூவர் படுகாயமடைந்து கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: