கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் குறித்த பகிடிவதை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகம், பல்கலைக்கழக நிர்வாகத்திடம் அறிக்கை கோரியுள்ளது.
இந் நிலையில் இது தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக அதிகாரி கதிர்காமநாதன் கந்தசாமி தலைமையில் நேற்று விசேட கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கலந்துரையாடலில் பல்கலைக்கழக ஒழுக்காற்றுக் குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட சுமார் 20 பேர் பங்கேற்றிருந்தனர்.
ஒழுக்காற்றுக்குழுவின் விசாரணைகளின் பின்னர் அவர்களால் வழங்கப்படும் பரிந்துரைகளுக்கு அமைய , மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என குறிப்பிட்ட பல்கலைக்கழக பதிவாளர் தொலைபேசியூடாக அச்சுறுத்தப்பட்ட மாணவிக்கு உரிய முறையில் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
No comments: