அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ஐ.தே.மு) நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் அலி பாராளுமன்றத்தில் நேற்று (06.02.2020) உரையாற்றியபோது...
மட்டக்களப்பு மாவட்ட கல்குடா தொகுதியில் அரசியல் ரீதியான அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதானால் பாதுகாப்பு அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது உரையில், ஜனாதிபதி நாட்டிலுள்ள அனைத்து இனமக்களும் சமமாக நடத்தப்படுவார்கள் என கூறியுள்ளள்ள நிலையில், கல்குடா தொகுதியில் பொது மக்களை அரசியல் ரீதியாக சிலர் அச்சுறுத்துகின்றனர். குறிப்பாக தாமரை மொட்டுச் சின்னத்துக்கே எதிர்காலத்தில் வாக்களிக்க வேண்டுமென அச்சுறுத்துகின்றனர்.
அதிகமாக பேசினால் கடத்தப்படுவீர்கள் எனவும் அச்சுறுத்துகின்றனர். ஜனாதிபதி அவ்வாறான கொள்கையுடையவர் அல்ல என எமக்குத் தெரியும்.எனவே, பாதுகாப்பு அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
2/07/2020 08:08:00 AM
தாமரை மொட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டுமென அச்சுறுத்துகின்றனர்!-அமீர் அலி
Subscribe to:
Post Comments (Atom)

No comments: